• Sep 19 2024

காதலனுக்காக அந்த விசயத்தை செய்த வாரிசு நடிகை-கசிந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல வாரிசு நடிகை திடீரென எலும்பும் தோலுமாய் மாறியது தனது காதலரான அந்த பிரபலத்துக்காகதான் என முனுமுனுக்கிறது கோடம்பாக்கம்.

அக்கடதேசத்தை சேர்ந்தவர் அந்த வாரிசு நடிகை. அப்பாவும் அம்மாவும் சினிமா பிரபலங்கள் என்பதால் ஈசியாக என்ட்ரி கொடுத்த அந்த வாரிசு நடிகை, தனது திறமையால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.நடிகையின் டேலண்ட்டை பார்த்த மற்ற மொழி சினிமாக்காரர்களும் கோடிகளை கொட்டிக் கொடுத்து வளைத்து போட்டனர்.

மேலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிசுகிசுக்களுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர். மேலும் ஆரம்பத்தில் மாஸ் ஹீரோ ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை. இதன் பின்னர் ஒல்லி பிரபலம் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போலவே நடிகையும் அந்த பிரபலமும் சமூக வலைதளங்களில் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் இரவு பார்ட்டிகளுக்கும் சென்று வந்தனர்.மேலும் அந்த போட்டோக்கள் ஒரு பக்கம் வெளியானாலும் ரிலேஷன்ஷிப் குறித்து வாயே திறக்காமல் இருந்து வருகிறார்கள். வாரிசு நடிகையை காட்டிலும் அவர் காதலித்து வரும் அந்த ஒல்லி பிரபலம் பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

மேலும் சினிமா பிரபலங்கள் பலருடன் ஏகப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கியிருக்கிறார் அந்த ஒல்லி பிரபலம். இந்நிலையில் நடிகை திடீரென எடையை குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியானதன் ரகசியம் வெளியாகியுள்ளது. நடிகை கொழுக்மொழுக் என்றிருந்ததால் அக்கா போன்று இருப்பதாக காதலன் தரப்பிலிருந்து கமெண்ட்ஸ் குவிந்ததாம்.

இதனால் தான் ஒல்லி காதலருக்கு மேட்சாக கன்னாபின்னாவென எடையை குறைத்துள்ளாராம் நடிகை. அத்தோடு அம்மணி பாலிவுட்டுக்கு போகதான் எடையை குறைத்தார் என நினைத்திருந்த கோடம்பாக்கம் இந்த தகவலை கேட்டு இதானா சங்கதி என பெருமூச்சு விட்டு வருகிறதாம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement