ஷாருக்கான் நடிப்பில் வெளியான தில் சே படத்தில் சைய சைய பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மலைகா அரோரா. டிவி ஷோக்களை நடத்திவரும் இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார்.

இன்று காலை 9 மணியளவில் மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா பாந்த்ரா வீட்டில் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அவரது தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை, போலீசார் அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நடிகை மலைகா அரோரா இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
                             
                            
                            
                            
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!