• Sep 20 2024

விக்ரம் படத்தின் புதிய மேக்கிங் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவும் ஹெஸ்ட் ரோலில் நடித்திருக்கின்றார். அத்தோடு இப்படத்திற்கு அனிரூத்தும் இசையமைத்துள்ளதோடு வருகின்ற ஜுன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ளது.

கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் இப்படம் 5 மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது.

https://twitter.com/RKFI/status/1531548548852232192

இந்த படத்தில் பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய போஸ்டரோடு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘சந்தானம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது படத்தின் மேக்கிங் சம்மந்தப்பட்ட சில காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவை இணையத்தில் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement