• Jun 03 2023

வீசப்பட்ட மனோபாலாவின் உடமைகளை வைத்து மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்...இப்படியுமா என ஆச்சர்யப்படும் ரசிகர்கள்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

பாரதிராஜாவின் முக்கியமான உதவி இயக்குநர்களில் ஒருவராக மனோபாலா திகழ்ந்தவர்.புதிய வார்ப்புகள் படத்தில் தொடங்கி டிக் டிக் டிக், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் 1982ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக மாறினார்.அதனைத் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களையும், கன்னடத்தில், ஹிந்தியில் தலா ஒரு படத்தையும் அவர் இயக்கி வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார்.

2002ஆம் ஆண்டு நைனா படத்தை இயக்கிய அவர் சில சீரியல்களையும் இயக்கியிருக்கிறார். அதனையடுத்து இயக்கத்தை மூட்டை கட்டிவிட்டு நடிப்பு பக்கம் சென்றா மனோபாலா. நடிப்பு துறையிலும் தனது முத்திரயை வெகு சீக்கிரமாகவே பதித்துவிட்டார் அவர். இதனால் அவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்டோருடன் அவர் செய்த காமெடி காட்சிகள் பட்டையை கிளப்பியவை.

பல படங்களில் நடித்திருந்த மற்றும் நடிக்க கமிட்டாகியிருந்த மனோபாலாவுக்கு கடந்த கல்லீரல் பிரச்னை உருவானது. அதோடு அவ்வப்போது நெஞ்சு வலியும் இருந்திருக்கிறது. இதனையொட்டி சென்னை அப்போலோவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சூழலில், சில காரணங்களால் அவர் வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

சிகிச்சை பலனின்றி எல்.வி.பிரசாத் ரோட்டில் இருக்கும் அவர் வீட்டில் மனோபாலாவின் உயிர் சில நாட்களுக்குமுன்  பிரிந்தது. அவரது இந்த மரணம் மிகப்பெரிய சோகத்தை கோலிவுட்டுக்கு கொடுத்திருக்கிறது. சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி இரங்கலை தெரிவித்தனர்.

இந்நிலையில் மனோபாலாவின் அந்த இடத்து வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால் அவரது உடமைகளை வீசப்பட்டு எரிக்கப்படும்.ஆனால் அவரின் மனைவியோ அவரின் உடமைனளை எரிக்காமல் அதை அப்படியே அனாதை ஆச்சிரமத்திற்கு கொடுத்துள்ளார்.அவரின் ஞாபகத்திற்காக அவரின் வாட்ச் போன்றவற்றை எடுத்து வைத்துள்ளாராம்.அவரின் உடமைகளை எரிப்பதற்கு யாராவது பிரியோசனமாக பாவித்தால் நல்லது என்று எண்ணி அப்படி செய்துள்ளாராம்.

Advertisement

Advertisement

Advertisement