• May 29 2023

நடிகர் டெல்லி கணேஷிற்கு இப்படி ஒரு வருத்தமா? உருக்கமாக சொன்ன காரணம்..!

Aishu / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் டெல்லி கணேஷ் முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். இவர் காமெடி, வில்லத்தனம் என பன்முக திறமையில் கலக்கி கொண்டிருப்பவர் தான், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தக்கூடியவர்தான். அத்தோடு  இவர் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் தானாம்.

இவர் இதுவரைக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தட்சிண பாரத நாடக சபா எனப்படும் தில்லி நாடக குழுவில் ஒரு உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆரம்பத்தில் டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன்பு 1964 முதல் 1974 ஆம் ஆண்டு வரைக்கும் இந்திய வான்படையில் பணியாற்றி உள்ளார்.

டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் தான். அத்தோடு இந்த திரைப்படத்தில் இவரை அறிமுகம் செய்தவர் கே.பாலச்சந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதா பாத்திரங்கள் நகைச்சுவையாகவும், துணை நடிகராகவும் இருந்தது. மேலும் இவர் அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்களில் தான் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் குணசித்திர வேடங்களில் மனம் கவர்ந்த பல படங்கள் இருக்கின்றது. மேலும் அதில் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம் என்று பல திரைப்படங்கள் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்திலோ ஒரு யதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிக்காட்டி உள்ளார்.திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வசந்தம், கஸ்தூரி போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

எனினும் தற்போது கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் மாரி தாத்தாவாக நீலகண்டன் கேரக்டரில் நடித்து வருகிறார்அது மட்டுமல்லாமல் மர்மதேசம், பொறந்த வீடா புகுந்த வீடா, செல்லமே, வீட்டுக்கு வீடு லூட்டி, மனிதர்கள், திருப்பாவை, ஆஹா, மனைவி, பல்லாங்குழி என பல சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தனுக்கு தமிழில் மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தில் இவர்தான் குரல் கொடுத்திருக்கிறார். எனினும் அது மட்டும் அல்லாமல் சிரஞ்சீவி, பிரதாப் போத்தன் போன்றவருக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் டெல்லி கணேஷிற்கு ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் பொதுவாக என்னை எந்த விருது விழாவிற்கு யாரும் அழைத்தது கிடையாது. எனக்கு விருது வழங்கியதும் கிடையாது. ஏனென்றால் தமிழ்  திரையுலகில்  குணச்சித்திர நடிகர்களை யாரும் மதிப்பதில்லை.

இதை சொன்னால் யாரும் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. மலையாள திரையுலகில் குணசித்திர நடிகர்களை கௌரவிப்பார்கள். ஆனால் இங்கே எங்களை விருது விழாவிற்கு அழைக்க கூட மாட்டார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement