• Apr 01 2025

பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்! சோகத்தில் ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகர் லட்சுமி நாராயணன் சேசு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று காலமானார்


சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக பாப்புலரானவர் சேஷு. அவர் ஏராளமான படங்களிலும் காமெடியனாக நடித்து இருக்கிறார். கடைசியாக அவர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் கமெடியில் கலக்கி இருந்தார்.


தற்போது 60 வயாதாகும் சேஷு, ஒரு வாரம் முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சேஷு மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement