• Jul 05 2025

மனோஜை திருடன் என அடித்த குடும்பம்..!முகமூடியை திறந்ததும் ஷாக்கில்!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ஸ்ருதியும் மீனாவும்  அந்த திருடனை போட்டு அடிக்கிறார்கள். பின் திருடன் தப்பித்து விட மனோஜை திருடன் என நினைத்து அடிக்கின்றார்கள். அதன் பின்பு குடும்பத்தின் ஒவ்வொருவரும் சேர்ந்து மனோஜை அடிக்கின்றார். அவர் அம்மா என்று கத்தும் போது  விஜயா அடிக்கின்றதை  நிறுத்த சொல்லி விட்டு முகமூடியை திறந்து பார்க்கும் போது அதில் மனோஜை பார்த்து அதிர்ச்சியடைந்து  விட்டார்கள் மொத்த  குடும்பமும் .    


அடுத்து சீதாவின் திருமணத்திற்கு எல்லோரும் மண்டபத்தில் நிற்கின்றார்கள். ரோகிணி  மேக்கப்போட்டும்   முத்து, ஸ்ருதி , ரவி என எல்லோரும் கல்யாண  வேலைகள்  ஒவ்வொன்றையும் பார்த்து கொள்கின்றார்கள் . அதில் முத்துவின் அப்பாவையும் அம்மாவையும் மீனாவின் அம்மா வந்து சாப்பிட சொல்லி கேட்கின்றார்.அதற்கு அவர்கள் பிறகு சாப்பிடுவதாக கூறுகின்றார் . 


பின்பு ரவி சாப்பட்டு பந்தியை கவனித்து கொள்ளும் போது அங்கு  ஸ்ருதி வந்து ரவியை அழைத்து கொண்டு சென்று   சீதாவிற்கு தங்க செயின் பரிசாக அளிக்கின்றார். பின்பு சீதா  பதிவு திருமணம் செய்து கொண்ட விடயத்தை மாமாவிடமும் அம்மாவிடமும் சொல்லிவிடம் என்று கேட்க்கும் போது  மீனா அதற்கும் சொல்கின்றது என்றால் முதலே சொல்லி இருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். பின்பு  திருமணம் நல்ல படிய முடிந்த பிறகு சொல்லாம் என்று சொல்கின்றார்.  டுடே எபிசொட்

 


Advertisement

Advertisement