• Jul 21 2025

மாலத்தீவில் கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் ஸ்டில்களை பகிர்ந்த நடிகை..

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தன் பிறந்த நாளை குடும்பத்துடன் மாலத்தீவில் கொண்டாடிய செய்தி ரசிகர்களுக்குத் தெரிந்ததே. அந்த பயணத்தில் அவருடன் சேர்ந்து சென்றிருந்த நடிகை நிஷா அகர்வால் அங்கிருந்து எடுத்த மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.


2010ம் ஆண்டு திரைப்படத் துறையில் அறிமுகமான நிஷா 2013ல் கரண் வல்லாவை திருமணம் செய்து சினிமாவிலிருந்து விலகினார். தற்போது குடும்ப வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சமூக ஊடகங்களில் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுவரும் நிஷா இப்போது மாலத்தீவுப் பயணத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


நிலவொளியில் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தில் எடுத்த புகைப்படங்கள் சுறுசுறுப்பான கடல் விளையாட்டுகளின் கிளிக்ஸ் என நிஷா பகிர்ந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement