• Jul 13 2025

என் மீதுள்ள பழி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.. – வைரமுத்துவின் உருக்கமான பதில் வைரல்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஆழமான கவிதையூட்டும் பக்கத்தை நிறைத்தவர் தான் கவிஞர் வைரமுத்து. எத்தனையோ திரைப்படங்களுக்கு கவிதைகள் மற்றும் பாடல்களில் வாழ்வின் உண்மைகளை புனைந்தவர்.


ஆனால், சமீப காலமாக பாடல் வரிகளில் திருத்தங்கள் தொடர்பாக, வைரமுத்து மீது பழி, விமர்சனங்கள், சமூக ஊடக தாக்கங்கள் என்பன ஏற்பட்டுவருகின்றன. இது குறித்து, தற்போது வைரமுத்து தனது பதிலை, நேரடியாக அளித்துள்ளார்.


அதன்போது, "என்மீது ஒரு பழிஉண்டு, பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று சொல்வது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. பாட்டுவரியின் பொருளை மக்கள் புரிந்துகொள்ள தேவை ஏற்படும் நேரங்களில் மாற்றிக் கொடுத்திருக்கிறேன்; நியாயமான பொழுதுகளில் மாற்ற மறுத்திருக்கிறேன். பாட்டுவரியின் திருத்தத்தை பொருளமைதியை தீர்மானிப்பது நானல்ல, ஆனால் என் மீது பழி வருகிறது . நான் என்ன செய்ய?" என்று கேட்டுள்ளார் வைரமுத்து. இத்தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement