• Jan 18 2025

அது என்ன பைத்தியமா? என் புள்ளைய பாத்து அப்படி கேட்டாங்க..! பப்லுவின் சோகமான மறுபக்கம்!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். இவர் தனது முதல் மனைவி உடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த  24 வயது நிரம்பிய ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். எனினும் தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

எனினும், தனது முதல் மனைவியின் மகன் என்றால் பப்லுவுக்கு அவ்வளவு பிரியம்.. அதற்கு காரணம், அவரின் மகன் 3 வயதில் இருந்து 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்டது தான்.

முதலில் தன் மகனுக்கு ஆட்டிசம் குறைபாடு இருக்கிறது எனத் தெரிய வந்தவுடன் உலகமே இடிந்து விழுந்ததாக உணர்ந்தார். ஆனாலும் தனது மகனுக்கு உரிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறார்.


இந்த நிலையில், தனது மகனை பார்த்து, இது உன் பையனா? அவனுக்கு என்ன பைத்தியமா? என cic ஆபிசர் ஒருவர் கேட்டதாக மனம் நொந்து பெட்டியொன்று அளித்துள்ளார். அதன்படி, மேலும் அவர் கூறுகையில், 

ஒரு நாள் நானும் என் பையனும், பெங்களுர்ல இருந்து சென்னைக்கு வரும் போது செக் பண்ண ஆபிசர் இருந்தாங்க.. நானும் என் பையன் கிட்ட, நீங்க போய் கைய மேல தூக்கி நில்லுங்க.. நான் பின்னாலையே வாரன் என சொல்லி அனுப்பினான்.


அது போலவே அவனும் அங்கு போய் கைய தூக்கி நின்றான். ஆனா அவன் என்ன பாத்துகிட்டே கைய மேல தூக்கி இருந்தான். அப்போ நான் அங்கு போக,

இது உன் பையனா? அவனுக்கு பைத்தியமா அது? என ஒரு ஆபிசர் கேக்க, நான் நீங்க ஒரு ஆபிசர் இப்படி எல்லாம் கதைக்க கூடாது என சொல்ல, அப்ப எப்படி கதைக்கணும் என பையனை தடுத்து வைத்து என்னிடம் எகிறினார்.

நான் நேரா sp கிட்ட போய் நடந்தத சொல்ல, அவர் என்ன சமாதானம் செய்ய பார்த்தார். ஆனா நான் அங்கு நடந்த எல்லாத்தையும் வீடியோ சூட் பண்ணி மக்களுக்கு தெரிவிச்சிட்டன். அது ஒரு பெரிய சர்ச்சை ஆனது. இல்லனா அது தெரியாமலே போய் இருக்கும்.

இந்த பிரச்சனைக்கு பிறகு. இப்போ அப்படியான பிள்ளைகளுக்கு செக் பண்ண நல்ல சிஸ்டம் வந்து இருக்கு என சொல்லியுள்ளார்.


 

Advertisement

Advertisement