சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் நேற்று வெளியானது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம், வெளியான முதலே நாளிலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தற்போது வரை உலகளவில் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வெற்றியுடன் இணைந்து, நடிகர் ரஜினிகாந்தின் திரைத்துறையில் 50 ஆண்டு பயணம் என்பதையும் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர். இதனை ஒட்டி, தனது நன்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள்ளார். அதில் அவர்
“எனது 50 ஆண்டு திரையுலக பயணத்தை ஒட்டி என்னை வாழ்த்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, சசிகலா, தினகரன், பிரேமலதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது வாழ்வின் ஆதாரமான ரசிகர்களுக்கும் நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.
79வது சுதந்திர தினத்தையும் அவர் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். ‘கூலி’ திரைப்படத்தின் மெகா வெற்றி மற்றும் அவரது பொன்னிழை திரையுலக சாதனை, இரண்டையும் ரசிகர்கள் இனிமையாக கொண்டாடி வருகின்றனர்.
Thank you 🙏🏻 pic.twitter.com/EnmbSLOEDN
Listen News!