• Apr 26 2024

மகிழ் திருமேனியை காப்பி அடித்த 'தளபதி 67' இயக்குநர்... ஆதாரத்துடன் வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2010-ஆம் ஆண்டு வெளியான 'முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மகிழ் திருமேனி. இப்படத்தினைத் தொடர்ந்து 'தடையற தாக்க, மீகாமன், தடம் மற்றும் கடைசியாக கலகத் தலைவன்' போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். 


இவ்வாறு மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த 5 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, முதலுக்கு மோசமின்றி வசூலையும் பெற்றிருந்தன. இதனையடுத்து தற்போது அஜித் நடிக்கு 'Ak 62' படத்தினையும் மகிழ் திருமேனியை இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கி வரும் பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ், ஏற்கனவே மகிழ் திருமேனியை காப்பி அடித்தாக நெட்டிசன்கள் பலரும் ஆதாரத்துடன் வச்சு செய்து வருகின்றனர்.

அதாவது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு வெளியான 'மீகாமன்' என்ற திரைப்படத்தைத் தான் லோகேஷ் கனகராஜ் காப்பி அடித்துள்ளார் என கூறி வருகின்றனர். அந்தவகையில் மீகாமன் படத்தின் கதையும், கமல் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்தின் கான்செப்ட்டும் ஒன்றுதான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


அதுமட்டுமட்டுமல்லாது இரண்டு படங்களிலும் இருந்த தேள் சிம்பிள், சிட்டி - சந்தானம், அவினாஷ் - ஜோஷ், பாரதி - பிஜாய், குரு - அடைக்கலம், அருள் - விக்ரம், ஜோதி - ரோலெக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் ஒன்றாக இருந்தன எனவும் கூறி பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


அத்தோடு 2014ஆம் ஆண்டு மீகாமன் மூலம் மகிழ் திருமேனி கூறியதை லோகேஷ் கனகராஜ் பட்டி டிங்கரிங் பார்த்து கடந்த வருடம் கூறியதாகவும் நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement