• Apr 26 2024

‘தீ தளபதி‘ பாடலுக்கு போட்டியா களமிறங்கும்..அஜித்தின் ‘சில்லா சில்லா‘ பாடல்-வெளியானது சூப்பர் அப்டேட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக திகழும் அஜித்தின் படங்கள் அடுத்தடுத்து வெற்றியை ஈட்டி வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில் இவர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள படம் தான் துணிவு.

இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், படக்குழுவினர் ப்ரோமோஷன் எப்போது தொடங்குவார்கள் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அத்தோடு  இந்த படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தின் ப்ரோமோஷன் படுவேகமாக ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது போனி கபூர் துணிவு படத்தின் முதல் சிங்கிள் Chilla Chilla பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

டிசம்பர் 9ம் தேதி முதல் பாடல் சில்லா சில்லா வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படத்தில் சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேற்று பாடல் வெளியான நிலையில் பாடல் வெளியான 2 மணிநேரத்தில் 1.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்த பாடலுக்கு போட்டியாக சில்லா சில்லா பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.






Advertisement

Advertisement

Advertisement