• Sep 20 2024

’சிறகடிக்க ஆசை’ செட்டுக்கு திடீர் சர்ப்ரைஸ் விசிட் செய்த சின்னத்திரை பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் காமெடி மற்றும் திருப்பங்களுடன் சென்று கொண்டிருப்பது இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சில பிரபலங்கள் வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக ’திருமதி செல்வம்’ சீரியலில் நடித்த சஞ்சீவ்,  ’சிறகடிக்க ஆசை’ படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வருகை தந்துள்ளார். அதேபோல் ’தென்றல்’, ‘ஆபீஸ்’  உட்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஸ்ருதி ராஜ் இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் என்ற கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

குறிப்பாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து நண்பர் செல்வம் கேரக்டரில் நடித்து வரும் பழனியப்பன் கமெண்ட் பகுதியில் ’சூப்பர்’ என்று பதிவு செய்துள்ளார்.  மேலும் ’சிறகடிக்க ஆசை’மற்றும் திருமதி செல்வம் நடித்த இரண்டு குழுவினர்களை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது என்று பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement