சினிமாத் திரைத்துறையில் உயரிய விருதாக வருடாவருடம் வழங்கப்படும் விருதுதான் ஆஸ்கர் விருதுகள். இந்த விருதை வாங்குவதற்கு பலரும் வாழ்நாள் கனவாக கொண்டிருப்பார்கள். அதனை ஏஆர் ரகுமான் உள்ளிட்ட சிலரே சாத்தியப்படுத்தி உள்ளார்கள்.
ஆஸ்கார் விருது வழங்கும் விழா கடந்த மார்ச் பத்தாம் தேதி டால்பி திரையரங்கில் நடத்தப்பட்டது. தற்போது இந்த ஆண்டிற்க்கான 97வது ஆஸ்கார் விருது விழாவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி இந்த விருது விழா வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 97வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ், மலையாளம் மொழி படங்கள் இந்த ரேஸில் பங்கேற்றுள்ளன.
அதன்படி தமிழில் வெளியான தங்கலான், வாழை, கொட்டுக்காளி, மகாராஜா, ஜமா மற்றும் ஜிகர்தண்டா 2 என ஆறு படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கில் கல்கி உள்ளிட்ட மூன்று படங்களும், மலையாளத்தில் உள்ளொளுக்கு, ஆடு ஜீவித்தம் உள்ளிட்ட நான்கு படங்களும், இந்தியில் லபடா லேடீஸ், ஆர்ட்டிகள் 370 உள்ளிட்ட 12 படங்களுடன் தெலுங்கு, ஒடியா, மராத்தி மொழி படங்களும் இந்த ரேஸில் பங்கேற்றுள்ளன.
எனினும், கல்கி, வாழை, தங்கலான் உள்ளிட்ட படங்களை பின்னுக்கு தள்ளி இந்த ரேஸில் லபடா லேடிஸ் படம் அயல் நாட்டுக்கான தேர்வில் தேர்வாகியுள்ளது. இந்த படத்தை அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
Listen News!