• Dec 04 2024

கங்குவா படத்தில் திடீரென அதிரடி மாற்றம்.? தியேட்டர் ஓனர்களுக்கு அவசர அறிவிப்பு விடுவிப்பு

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியான முதல் நாளையே கிட்டத்தட்ட 50 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆனாலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும்பான்மையான தியேட்டர்களில் கங்குவா படம் வெளியானது. ஆனாலும் இந்த படத்தின் இசை மிக மோசமாக இருப்பதாகவும் பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

d_i_a

சுமார் 2000 கோடி வசூலிக்கும் என கங்குவா படத்திற்கு பல பிரமோஷன் பணிகள் இடம் பெற்றன. ஆனால் தற்போது இருநூறு கோடி ரூபாயை தாண்டுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அந்த அளவிற்கு கங்குவா படம் பற்றிய கலவையான விமர்சனங்கள் இணையத்தில் படு வைரலாகி உள்ளன.


இந்த நிலையில், கங்குவா பட குழு தரப்பில் இருந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு படத்தின் சவுண்ட் அளவினை குறைக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அதாவது கங்குவா படத்தில் அதிகமாக கத்தல் சத்தம் இருப்பதாகவும் இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் தொடர்ச்சியாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கங்குவா பட குழுவினர் படத்தின் சத்தத்தை குறைப்பதற்கு தியேட்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

Advertisement