• Jan 19 2025

தென்னிந்திய சினிமாவை காப்பாற்றும் ஓரே ஹீரோ இவர் தானா? வேற லெவல் அப்டேட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் சிறந்த நடன கலைஞராகவும் இயக்குனராகவும் காணப்படுகிறார். இவருக்கு இரண்டு முறை நந்தி  விருதுகளும் கிடைத்துள்ளது. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகின்றார் அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் பெரிதாக கதை இல்லை என்றாலும் அதன் ஹீரோயிசம், சமந்தா ஆடிய குத்தாட்டம், பகத் பாஸிலின் மிரட்டல் ஆகியவற்றை வைத்து வசூலில் லாபம் ஈட்டி இருந்தனர்.

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதில் ஒரு பாட்டுக்கு ஸ்ரீ லீலாவை புக் பண்ணி வைத்துள்ளார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. இறுதியாக டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

d_i_a

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது புஷ்பா 2 படத்திற்காக 300 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம் அல்லு அர்ஜுன். தற்போது இந்த தகவல் படு வைரலாகி உள்ளது.


தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக காணப்பட்டவர் தான் விஜய். ஆனாலும் மக்கள் சேவை தான் தனக்கு முக்கியம் என்று  சினிமாவிலிருந்து விலகி அரசியலில் கால் பதித்துள்ளார். ஆனாலும் விஜய் தனது இறுதிப் படமான 69 ஆவது படத்தில் வாங்கிய சம்பளம் 275 கோடி எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படி மேலே போய் 300 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அல்லு அர்ஜுன் காணப்படுகின்றார்.

Advertisement

Advertisement