• Jan 19 2025

சில்ட்ரன்ஸ் டேயை அமர்க்களமாக்கிய நயன்.. வேட்டி சட்டையில் கலக்கும் சிவன் குட்டிஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து  பிரபலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூப்பர் ஸ்டார் என பலருடனும் ஜோடியாக நடித்து பல ஹிட் சூப்பர் படங்களை கொடுத்திருந்தார். தற்போது 40 வயதான போதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோயினாகவே நடித்து வருகின்றார்.

d_i_a

நயன்தாரா நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின்பு நயன்தாரா நடித்த படங்கள் பெரிதாக எடுபடவில்லை. தற்போது நடிகர் யாஷ் நடிக்கும் டாஸ்கிக் படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.


நயன்தாராவின் சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் திருமண வாழ்க்கை, பிஸினஸ் கூட கொடி கட்டி பறந்து வருகின்றன. நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

இந்த நிலையில், நயன்தாரா தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேட்டி சட்டையுடன் விக்னேஷ் சிவன் தனது மகன்களோடு காணப்படுவதோடு நயன்தாரா பச்சை நிற பட்டு சேலையில் ஜொலிக்கின்றார். குறித்த புகைப் படங்கள்   இணையத்தில் வைரலாகியுள்ளன.

Advertisement

Advertisement