• Jan 19 2025

திருமணமான நடிகரை மணந்த ரவுடி பேபி ..? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை ஆயிஷா. இவர் இந்த சீரியலில் ரவுடி பேபியாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.

இந்த நிலையில், நடிகை ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆன நடிகர் கிருஷ்ணாவுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் உண்மையாகவே ஆயிஷா இவரை திருமணம் செய்து கொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

d_i_a

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் தான் நடிகர் கிருஷ்ணா. அதன் பின்பு அழகிய அசுரா, இதய திருடன், பத்து பத்து, ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய படங்களில் நடித்தார்.

இதில் ஆனந்தபுரத்து வீடு படத்தில் நடிக்கும் போது அவருடன் இணைந்து நடித்த சாயா சிந்துவுடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது வேறு படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.


இந்த நிலையில், சமூக வலைதள பக்கங்களில் நடிகை ஆயிஷா - கிருஷ்ணா இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே திருமணம் ஆன நடிகரை ஆயிஷா திருமணம் செய்து கொண்டாரா? அப்படி என்றால் கிருஷ்ணாவின் முன்னாள் மனைவி சாயா சிந்துவின் நிலை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர்

ஆனால் உண்மையிலேயே ஆயிஷா மற்றும் கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கும் உப்பு புளி காரம் என்ற படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட போட்டோ தான் அது என தெரிய வந்துள்ளது. இந்தத் தொடரை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். தற்போது இந்த வெப் தொடர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement