பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்ததோடு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பிரபலங்களும் இது குறித்து பலவாறு பேசி வந்தனர்.
முன்னதாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாமியார் தான் காரணம் என்றும் கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து மனு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். அப்போது ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் ஆர்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சமரசப் பேச்சு வார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்தார். இதனால் நவம்பர் 27 அன்று விசாரணைக்கு வரும் நிலையில், அன்று சமரச பேச்சுவார்த்தையை பொறுத்தே, அடுத்த முடிவுகள் வரும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!