• Nov 22 2024

உலக அரங்குகளில் கொடிகட்டி பறக்கும் தங்கலான்... மூன்று நாட்களில் வசூலில் அசுர வேட்டை??

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே தற்போது வெளியான தங்கலான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த படங்களுமே புரியாத சாதனையாக முதல் நாளிலேயே 26.44 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பா ரஞ்சித் தனது படங்களில் குறியீடாக தனது அரசியல்  நிலைப்பாட்டினை கூறி வந்தார். 

தற்போது தங்கலான் படத்தில் நேரடியாகவே காட்சிகளை வைத்து பிரமிக்க வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதும் பௌத்தத்தை நிறுவிய மாமன்னன் அசோகன் பெயர் கொண்ட கேரக்டர் வெட்டி வீசப்பட்ட புத்தர் தலையை முதலில் எடுப்பது தொடக்கம் துண்டாடப்பட்ட புத்தர் சிலை உடன் அதன் தலையை இணைப்பது என அனைத்து காட்சிகளுமே நேரடியாக அரசியல் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.


ஒரு வரலாற்றை 200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை பார்வையாளர்களின் மனதில் பதியும்படி ஒரு வரலாற்று படம் எடுத்து அசத்தியுள்ளார் பா ரஞ்சித். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

தங்கலான் படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே 26. 44 கோடிகளை வசூலித்திருந்தது. அதன் பின்பு இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. 

அதேபோல மூன்றாவது நாளிலும் 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் படம் இதுவரையில் 60 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement