• Apr 15 2025

விஜய் குறித்து தமிழிசை வெளியிட்ட பரபரப்பான கருத்து..! – சமூக ஊடகங்களில் பரவிய விவாதம்...!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழகத்தில் திரை உலகம் மற்றும் அரசியல் எப்பொழுதும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைந்திருப்பது மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கின்றது.

இந்நிலையில், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை நடிகர் விஜய் அரசியலிலும் திரையுலகிலும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சிறப்பாகக் கதைத்துள்ளார்.


சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழிசை நடிகர் விஜயின் அரசியல் பயணத்தையும், சமூக நல மனப்பான்மையையும் பற்றிப் பேசியிருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,"நான் பாமர மக்களுக்காக நடிக்கிறேன். அவர்கள் இலகுவாக படங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ டிக்கெட்டுக்கள் கொடுக்கின்றேன் என இருக்க வேண்டியது தானே" என்றார்.

இந்த கூற்று அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விஜய், பல ஆண்டுகளாக பாமர மக்களுடன் நெருக்கமான உறவை பேணி வருகின்றார். அந்தவகையில் தமிழிசை இவ்வாறு கூறியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் "அரசியல் என்பது உணர்ச்சிப் பேச்சு மூலம் நடக்கக் கூடியது அல்ல. அரசியல் என்பது மக்களின் நலனைக் கவனிக்க வேண்டிய கடமையாக இருக்கின்றது. அரசியல் பற்றிய அறிவும், அனுபவமும் இல்லாமல் யாரும் பேசக்கூடாது. முதலில் அரசியல் நிலைமை மற்றும் அதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு தான் அரசியல் குறித்துப் பேச வேண்டும்." எனவும் தமிழிசை கூறியுள்ளார்.

தமிழக அரசியல், எப்போதும் திரை உலகின் தாக்கத்துடன் இருந்து வந்துள்ளது. தற்போது நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ள சூழலில், அவரைப் பற்றிய புகழ்ச்சியும் விமர்சனமும் இயல்பாகவே தொடர்கின்றது. அந்தவகையில் தமிழிசை எழுப்பிய விமர்சனத்தால் விஜய் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement