• Apr 26 2024

மீண்டும் கோதை குடும்பத்துடன் ஒன்று சேர்ந்த தமிழும் சரஸ்வதியும்-இந்த ஒரு நொடிக்காகத் தானே வெயிட் பண்றோம் - வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் வரவர விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. தமிழ் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக கம்பனியை நடத்தி வருகின்றார்.

மேலும்  தமிழின் அப்பா தமிழ் மீது தப்பில்லை, அர்ஜுன் தான் ஏதோ சதி பண்ணியிருக்க வேண்டும் என்று சந்தேசப்படுகின்றார். இதனால் அர்ஜுன் கத்திக் குத்து வாங்கிய இடத்தில் நடந்தது என்பதை அறிய ஹொட்டல் ஒன்றிற்குச் சென்று அந்த இடத்தின் சிசிடிவியை வாங்கி வைத்து போட்டுப் பார்க்கின்றார்.

இதனை மறைந்து நின்று பார்த்த அர்ஜுன் அந்த சிசி டிவி புட்டேஜை அழித்து விடுகின்றார். இதனால் நடேசன் எப்படி உண்மைகளை அறியப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தமிழும் சரஸ்வதியும் குடும்பம் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றைச் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement