• May 07 2024

'விடாமுயற்சி'படத்தின் ஷுட்டிங் ஆரம்பம்- சென்னை திரும்பவுள்ள அஜித்- எப்போது தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித். நடிப்பைத் தாண்டி போட்டோகிராஃபி, கார் ரேஸ், பைக் ரேஸ், சமையல், ரிப்பில் ஷூட்டிங், ஏரோ மாடலிங் போன்ற சாகசம் நிறைந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது உலகசுற்றுலா பயணத்தை, இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கிலேயே சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த பின்னர், தன்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகிவிட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் நேபாளம் மற்றும் பூடானுக்கு பைக்கில் பயணம் செய்த அஜித், தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருவதால்,கேரள மாநிலத்தில் தனது சுற்று பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வயநாட்டில் தற்போது அஜித் சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும், இதை தொடர்ந்து இன்னும் சில நாட்கள் கேரளாவின் வடமாவட்டங்களில் பயணம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.


மேலும் அஜித் நடிக்கும், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2 ஆவது வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்த வாரத்தில் அஜித் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 'விடாமுயற்சி' படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.


ஏற்கனவே அஜித் த்ரிஷா இனைத்து, ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் 'விடாமுயற்சி' படத்திலும் 5-வது முறையாக ஜோடி சேர உள்ளார்களாம். 'விடமுயற்சி' படப்பிடிப்பை ஜூன் முதல் அக்டோபர் வரை ஒரே ஷெட்யூலில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுளார்களாம். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement