இரண்டு படங்கள் மட்டுமே நடித்த சூரிக்கு சமமாக சிம்புவை தயாரிப்பாளர் சங்கம் நடத்தி உள்ளதை அடுத்து டி ராஜேந்தர் கொந்தளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் கூடிய நிலையில் சில வரைமுறைகளை தொகுத்து உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர்களை ஏ கிரேடு, பி கிரேடு என பிரித்து அந்த நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிடும் காலத்தை நிர்ணயம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஏ கிரேடு நடிகர்களின் திரைப்படங்கள் 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்றும் பி கிரேடு நடிகர்களின் படங்கள் நான்கு வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக புறப்படுகிறது.
இந்த நிலையில் ஏ கிரேடில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், சூர்யா இடம்பெற்று இருப்பதாகவும் மற்ற நடிகர்கள் பி கிரேடில் இடம் பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிம்பு, சூரி ஆகியோர் பி கிரேடில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த டி ராஜேந்தர், இரண்டு படங்கள் ஹீரோவாக நடித்த சூரிக்கு சமமாக சிம்புவை நடத்துவதா? எத்தனை ஆண்டுகள் சிம்பு ஹீரோவாக நடித்து வருகிறார்’ என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு என்ன முடிவு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!