• Jan 19 2025

'துருவ நட்சத்திரம்' மன்னிக்கவும்.. ரிலீஸுக்கு இன்னும் நாட்கள் தேவை - கௌதம் மேனன் ட்வீட்! குழப்பத்தில் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன் ,விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் துருவ நட்சத்திரம். 

2016 ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் 2018ல் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது இருந்து பல வருடங்களாக கிடப்பில் இருந்த அந்த படத்தை தற்போது திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. 

எனினும், 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இம்மாதம் 24ஆம் திகதி  வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் புரமோஷன் பணிகள் நிறைவு அடையாததால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது.


இந்த நிலையில், 'துருவ நட்சத்திரம்' இன்று ரிலீஸாகாது என்று இயக்குநர் கௌதம் மேனன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

அதனபடி அவர் வெளியிட்ட பதிவில், 'மன்னிக்கவும். இன்று துருவ நட்சத்திரத்தை திரைக்கு கொண்டுவர முடியவில்லை. நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். இருந்தாலும் ரிலீஸுக்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் தேவை என்று தெரிகிறது. அப்போது டிக்கெட்டுக்கான முன்பதிவுகள், தியேட்டர்கள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிக்கும் என நம்புகிறோம். படத்துக்கான ஆதரவு எங்களை கவர்ந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்' என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கௌதம் மேனன் இவ்வாறு அறிவித்ததில்  ரசிகர்கள் மிகவும்  ஏமாற்றமடைந்திருக்கின்றனர். 

Advertisement

Advertisement