• May 20 2024

மேட்சிங் மேட்சிங் உடையில் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துத் தெரிவித்த சூர்யா ஜோதிகா- வைரல் வீடியோ.!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடினமான முயற்சியினால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் தான் சூர்யா. இவர் தற்பொழுது தரமான படங்களைத் தேர்வு செய்து நடிதது வருவதால் இவருடைய படங்கள் வசூலிலும் அள்ளிக் குவித்து விடுவதைக் காணலாம்.

அந்த வகையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். அதன் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒர் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.


இது தவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்திலும் வாடிவாசல் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்காக ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் பயிற்சிகளில் கூட சூர்யா ஈடுபட்டு வந்தார்.இதே போல இவருடைய காதல் மனைவியான ஜோதிகாவும் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

அத்தோ இருவரும் இணைந்து 2டி என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் தயாரிப்பில் வெளியான 'ஜெய்பீம்' , கார்கி, 'விருமன்' போன்ற படங்கள் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.


இது ஒருபுறம் இருக்க சூர்யா - ஜோதிகா இருவரும் மேட்சிங் மேட்சிங் உடையில்.. ரசிகர்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் சூர்யா மிகவும் பாதுகாப்பாக இந்த தீபாவளியை கொண்டாடுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்த வீடியோ தற்போது வெளியாக சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement