• May 20 2024

அடுத்த உலகநாயகன் சூர்யா தான்- மேடையில் சேர்ட்டிபிக்கேட் கொடுத்த கமல்ஹாசன்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மாதம் ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிரபலங்கள் ரசிகர்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்று 450 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

கதாநாயகனாக கமல் நடித்திருந்ததோ முக்கிய வேடத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோரும் நடித்திருந்தனர்.தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் வசூல் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிக வசூலைக் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே பெரும் வசூல் சாதனை படைத்த படமாக மாறியிருக்கிறது. இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி,பகத் பாசிலின் நடிப்பு இசை என அனைத்து வேறலெவலில் இருந்தது . குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் 5 நிமிடம் மட்டுமே வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் தரமாக அமைந்து படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து விட்டது. சூர்யாவின் திரைப்பயணத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தின் 50 நாட்கள் வெற்றி விழாவை கொண்டாடும் விதமாக விக்ரம் 50 நிகழ்ச்சியில்,கமலஹாசன் கலந்துகொண்டார். அப்போது விக்ரம் படம் ரசிகர்களால் தான் வெற்றிபெற்றது. அவர்களால் வெற்றியையும் தரமுடியும் தோல்விகளையும் தரமுடியும் என்றார். எனவே அவர்களை ஈர்க்கும் வகையில் நாம் படம் எடுக்கவேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

இதையடுத்து, நாயகன் படத்தில் அனைவரின் மனதைத் தொட்ட கமல் அழும் காட்சி போடப்பட்டது. அந்த காட்சியை பார்த்துவிட்டு பேசிய கமல், இந்த படத்தில் வசனகர்த்தாவாக இருந்த எழுத்தாளர் பாலகுமாரின் மகன் பெயர் சூர்யா, சரவணன் சூர்யாவாக மாறியதும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். நான் ரோலக்சை சொல்கிறேன். விக்ரம் படத்தில் சூர்யா நாயகன் இல்லை இருந்தாலும், அந்த கதாபாத்திரம் அவ்வளவு பெரிய தாக்கத்தை கொடுத்துள்ளது. அடுத்த நாயகனாக ஆகவேண்டிய ஆளு என கமல்ஹாசன், சூர்யாவை அடுத்த உலக நாயகன் என சொல்லால் கூறி புகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement