• May 20 2024

பீஸ்ட் பட டெக்னோலஜி தான் விக்ரம் படத்திலும் பயன்படுத்தப்பட்டதா?-இணையத்தில் வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உலகநாயகன் என்று அழைக்கப்படுவர் தான் நடிகர் கமல்ஹாசன் மைக்கல் மதனகாமராஜன் ,இந்தியன், தெனாலி, தசாவதாரம் போன்ற இன்னும் பல திரைப்படங்களில் தனது சூப்பர் ஹிட் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக இவரது நடிப்பில் எந்த திரைப்படங்களும் வெளியாகமல் இருந்த நிலையில் தான் இவரது தீவர ரசிகன் ஆன லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்னும் படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார்.கடந்த ஜூன் மாதம் வெளியாகிய இத்திரைப்படம் எதிர்பார்ப்பைத் தாண்டி சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இப்படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்ததோடு இப்படத்தினால் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றது. இப்படத்தில் நடித்தவர்களின் மவுசும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சூர்யா பகத் பாசில் ஆகியோருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

https://twitter.com/EcrPSaravanann/status/1556473766560993285

ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடிய இப்படத்தில் இடைவேளை காட்சி பெரியளவில் பேசப்பட்டது.அதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் குறிப்பிட்ட காட்சிக்கு பயன்படுத்தப்பட்ட Mocobot கேமரா தான். ஆனால் விக்ரம் படத்திற்கு முன்பே அந்த Mocobot கேமராவை விஜய்யின் திரைப்படத்தில் பயன்படுத்திருக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் Mocobot-யை பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் விஜய்யின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதனை விட விக்ரம் படத்தின் காட்சி பிரமாதமாக இருந்ததால் பெரியளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement