• May 20 2024

சூர்யாவும், விக்ரமும் இணைந்து நடிக்கவிருந்து மிஸ் ஆகிப்போன படம்…எது தெரியுமா?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் சூர்யா மற்றும் விக்ரம். திரையுலக அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை இவர்களின் நடிப்பில் வெளியாகிய படங்கள் எண்ணிலடங்காதவை. மேலும் இவர்கள் இருவரது நடிப்பிலும் சில படங்கள் தற்போது வெளியாகவிருக்கின்றன. மேலும் இவர்கள் இருவரும் டாப் நடிகர்களாக இருந்த போதே சேர்ந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது 2003-ஆம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான 'பிதாமகன்' என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திரைப்பிரபலங்கள் பலராலும் சிறந்த திரைப்படம் என்ற பாராட்டைப் பெற்ற இப்படத்தில் சூர்யா, விக்ரம் என இருவருமே தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். மேலும் இப்படத்தில் நடித்தற்காக நடிகர் விக்ரம் தேசிய விருது பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரையும் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காவியத் தலைவன்'. இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் விக்ரம் தான் முதலில் நடிக்க தேர்வாகியுள்ளனர். பின் தேதி பிரச்சனையின் காரணமாக அவர்கள் இருவரும் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவர்களுக்கு பதிலாக சித்தார்த் மற்றும் பிரித்விராஜ் நடித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement