• Apr 26 2024

நடிகர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தையின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் வழக்கறிஞராக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, இப்படத்தில் இவர் அஜித்திற்கு எதிராக நீதிமன்றத்தில் செய்யும் வாதங்கள், நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு வெளிவந்த க/பெ. ரணசிங்கம் படத்தில் தமிழ் குமரன் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்திருந்தார். இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ஶ்ரீ ஶ்ரீ உவே ரகுநாதாசார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்று, திங்கள் கிழமை (02.01.2023) இரவு 9:45 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள வீட்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ராம்சிங்ஹாசன் பாண்டே மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரங்கராஜ் பாண்டே தந்தை மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மலர் மாலை அணிவித்து, பூத உடலை வணங்கி விட்டு ரங்கராஜ் பாண்டேவிடம் துக்கம் விசாரித்தார். பின்னர் தனது உறவினர்களை ரஜினிகாந்த்திற்கு ரங்கராஜ் பாண்டே அறிமுகமும் செய்து வைத்தார். கருப்பு நிற சட்டையும் வெண்ணிற வேட்டி அணிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement