• Dec 01 2023

திரிஷாவின் திரை வாழ்க்கையை சிதைக்கும் விக்னேஷ் சிவன்.. இதற்கு நயன்தாராவும் உடந்தையாம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் நயன்தாராவை வைத்து இதுவரை இரு திரைப்படங்களை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது 'நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல்' போன்றவையே அவையாகும்.


அந்தவகையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடித்திருந்தார். ஆனால், முதன் முதலில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது திரிஷா தானாம். ஆனால், நயன்தாராவால் இந்த வாய்ப்பு திரிஷாவின் கைநழுவி போயுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஏனெனில் படத்தின் தொடக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்று தான் விக்னேஷ் சிவன் போடுவார். ஆனால் திரிஷா, அப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போட்டால் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய மதிப்பை குறைக்கும் என எண்ணி, லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவிற்கு போடாமல் இருந்தால், நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளாராம். 


ஆனால் இதற்கு கொஞ்சமும் சம்மதம் தெரிவிக்காத விக்னேஷ் சிவன் திரிஷாவை அப்படத்திலிருந்து தூக்கிவிட்டு சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'ஏகே 62' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திரிஷாவை தான் ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஆனால் ஏற்கனவே திரிஷாவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் பட பிரச்சனையால் அஜித் படத்திலும் திரிஷாவை வேண்டாம் என்று விக்னேஷ் சிவன் கூறிவிட்டாராம். இப்படி நடிகை திரிஷாவின் திரை வாழ்க்கையில் கிடைக்கும் பல வாய்ப்புகளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சேர்ந்து தடுத்து வருவது நியாயமா? என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement