• Aug 03 2025

சுந்தரி கேப்ரியல்லாவா இது? குழந்தை பெற்ற பிறகு படுகிளாமரா மாறிட்டாங்களே.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

சன் டீவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல், அதன் கதை, நடிப்பு மற்றும் உணர்வுகள் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாக இருந்தது. அந்த தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.


இவர் சுந்தரி தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, வெற்றிகரமான பெண் கதாநாயகியாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். சீரியல் முடிவுக்கு வந்ததும், கேப்ரியல்லா தற்காலிகமாக நடிப்பிலிருந்து ஓய்வெடுத்தார். இதற்கான முக்கிய காரணம், அவர் கர்ப்பமாக இருந்தார் என்பதே.


குழந்தைப் பிறப்புக்குப் பிறகு, தாய்மையின் பருவத்தை அனுபவித்துக் கொண்டிருந்த கேப்ரியல்லா, தற்போது மீண்டும் கியூட் மற்றும் க்ளாமரஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்,“மீண்டும் ஸ்கிரீனுக்குத் திரும்பப்போகிறீர்களா?” என எமோஜிகளுடன் கூடிய கமெண்ட்ஸினை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement