இயக்குனர் சுந்தர் சி, ’அரண்மனை 4’ என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக கசிந்து வந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக அவர் ’கலகலப்பு 3’ படத்தை இயக்க இருப்பதாகவும் ’அரண்மனை 5’ படத்தை இயக்க இருப்பதாகவும், ஏற்கனவே ஆரம்பித்து கைவிட்ட ‘சங்கமித்ரா’ படத்தை இயக்க இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது வந்துள்ள தகவல்படி அவர் வடிவேலு ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர் சி - வடிவேலு ஆகிய இருவரும் ’தலைநகரம்’ படத்தில் காமெடியில் கலக்கிய நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் தான் சுந்தர் சி யின் அடுத்த படம் என்றும் கூறப்படுகிறது.
சுந்தர் சி எப்போதுமே ஒரு திகில் படம், ஒரு நகைச்சுவை படம் என மாறி மாறி இயக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ’அரண்மனை 4’ என்ற திகில் படத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வடிவேலுவுடன் இணைந்து ஒரு புதிய கூட்டணி அமைத்து முழு நீள காமெடி படத்தை கொடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வடிவேலு ரீஎண்ட்ரியில் குறிப்பிடத்தக்க வெற்றி படம் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இந்த படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!