• Jan 19 2025

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகை.. எந்த சீரியலில் தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் காணப்பட்ட நடிகை   தான்தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் காணப்பட்ட நடிகை   தான் கௌதமி. இவர் நடிப்பில் 80, 90 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள். இவர் நடிப்பில் 80, 90 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என  பலமொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல நடிகர்களோடு நடித்துள்ளார். இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இறுதியாக கமலஹாசனுடன் இணைந்து நடித்த பாபநாசம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

d_i_a

சமீபத்தில் இடம்பெற்ற கங்குவா பட ப்ரோமோஷனில் தனது அண்ணனுக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் வரும் நடிகை கௌதமியை ரொம்ப பிடிக்கும் என்று சூர்யா நிகழ்ச்சியில் இருக்கும்போது கார்த்தி போன் பண்ணி கூறியிருந்தார். அந்த தகவல்கள் இணையத்தில் வைரலானது.


இந்த நிலையில், நடிகை கௌதமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கொள்ளாதே என்ற சீரியலில் என்ட்ரி  கொடுத்துள்ளார் கௌதமி.

இது தொடர்பான வீடியோக்களும் புரோமோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் கேமியா ரோலில் என்ட்ரி கொடுத்துள்ள கௌதமி தொடர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement