சன் டிவிக்காக விஜய் இரண்டு மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் அதற்கு ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் ’நோ’ என்று விஜய் சொன்னதை அடுத்து சன் டிவி ’கோட்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி 55 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தது.
ஆனால் அதே நேரத்தில் சன் டிவி சில நிபந்தனைகள் விதித்ததாகவும் முதல் கட்டமாக படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு டிவியில் ஒளிபரப்பு விடுவோம், நாங்கள் சொல்லும் தேதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும், அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சையான காட்சிகள் படத்தில் இருக்கக்கூடாது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் நிபந்தனைகள் விதித்ததாக கூறப்பட்டது.
இதற்கு விஜய்யிடம் ஆலோசனை செய்த தயாரிப்பு தரப்பு ஓகே சொல்லிவிட்டார்கள். இதற்கு அடுத்த நிபந்தனை தான் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்காவது நிபந்தனையாக சன் டிவிக்காக விஜய் 2 மணி நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் ’கோட்’ படம் குறித்த ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்ததாம்.
இந்த நிபந்தனைக்கு தான் விஜய் கொஞ்சம் கூட யோசிக்காமல் ’நோ’ என்று சொல்லிவிட்டதை அடுத்து சன் டிவி 'கோட்’ படத்தின் உரிமையை வாங்க மறுத்து விட்டதாகவும் இதனை அடுத்து இந்த படம் ஜீ டிவிக்கு கைமாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவர் திமுகவை எதிர்த்து தான் பிரச்சாரம் செய்ய போவதாக கூறப்படும் நிலையில் சன் டிவிக்கு பேட்டி அளிக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
Listen News!