• Jul 27 2024

’உயிர் தமிழுக்கு’ படம் படுதோல்வி.. அமீர் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இயக்குனர் அமீர் சமீபத்தில் சில சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிக்கினாலும் அதையெல்லாம் ’உயிர் தமிழுக்கு’ என்ற படத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் திரையுலகினரையும் ரசிகர்களையும் மறக்கடித்து விடலாம் என்று எண்ணி அந்த படத்துக்கு தீவிரமாக  ப்ரோமோஷன் செய்தார்.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்றும் வசூலிலும் திருப்தி அடையவில்லை என்றும் ’அரண்மனை 4’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்களின் வெற்றி இந்த படத்தை சுத்தமாக துடைத்து விட்டதாகவும் தற்போது ஒரு சில திரையரங்குகளில் மட்டும்தான் ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தும், ’உயிர் தமிழுக்கு ’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் அமீர் அதிருப்தியில் இருந்ததாகவும் இருப்பினும் அவர் ஆன்லைன் ஆட்களை வைத்து தீவிரமாக ப்ரோமோஷன் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பாக கமர்சியல் நடிகராக மாற அவர் முடிவு செய்திருப்பதாகவும் அது குறித்த கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 அவர் இயக்கிய படங்கள் வெளியாகாமல் சர்ச்சையில் இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடிப்பில் கவனம் செலுத்த போவதாகவும் இனி அமீர் நடிக்கும் படங்களை அதிகம் எதிர்பார்க்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement