• Oct 04 2024

கங்குவா படம் தொடர்பில் அடுத்தடுத்து வெளியான அப்டேட்கள்! சும்மா தெறிக்குதே..!!

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தினால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.

கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், பசுபதி உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். அத்துடன் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி இந்த படத்தில் கேமியா ரோலில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் கங்குவா திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னாலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் 10-ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மோதுவதற்கு தயாராக இல்லை என இந்த படத்தில் இயக்குனர் தெரிவித்ததோடு அதிலிருந்து பின் வாங்கினார். அதன் பின்பு எப்போது கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், 14ஆம் தேதி நவம்பர் இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், கங்குவா திரைப்படம் பற்றி மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிள் அக்டோபர் இரண்டாம் தேதி ரிலீசாக உள்ளது.

 மேலும் கங்குவா படத்தின் ஆடியோ லான்ச் அக்டோபர் 20ஆம் தேதியும், கங்குவா படத்தின் டிரைலர் அக்டோபர் 31-ஆம் தேதியும்  வெளியாக உள்ளது. தற்போது இந்த தகவல்கள் சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement