• May 08 2026

நடிகைகளுக்கு சப்ஸ்கிரைப்.? ப்ரியா பவானி சங்கரின் காதலர் செய்த செயல் வைரல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

ப்ரியா பவானி சங்கர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். செய்தி வாசிப்பாளராக தனது ஊடகப் பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து, மேயாத மான் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைத்தன. 


பின்பு கார்த்தி உடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே. சூர்யா உடன் ‘மான்ஸ்டர்’, ‘பொம்மை’, அருண் விஜய் உடன் ‘மாஃபியா’, ‘யானை’, மேலும் தனுஷ் உடன் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் அடிக்கடி பேசுபொருளாகி வருகிறது. நீண்டகாலமாக தனது காதலர் ராஜவேலுடன் உறவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளார்.

தற்போது, சமூக வலைத்தளங்களில் புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் வசதியின் மூலம் பலர் வருமானம் ஈட்டும் சூழலில், ப்ரியா பவானி சங்கரின் காதலர் ராஜவேல் பல நடிகைகளின் சப்ஸ்கிரிப்ஷன்களுக்கு மாதாந்திர கட்டணம் செலுத்தி பின்தொடர்கிறார் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement