• Apr 17 2026

இந்த குட்டி பொண்ணு யாருனு தெரியுமா.? ஒரு காலத்தில் உலக அழகியா இருந்தவங்க..

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் ஒருவர். மாடலிங்கில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 2000ஆம் ஆண்டு நடைபெற்ற Miss World 2000 போட்டியில் வெற்றி பெற்று உலகளவில் கவனம் பெற்றார். இதன் மூலம் சினிமா துறையில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்தன.

பின்னர் அவர் தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக Quantico தொடரின் மூலம் ஹாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அந்த தொடரில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் ரசிகர்களை பெற்றார்.


தனிப்பட்ட வாழ்க்கையில், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் “மால்டி” என்ற மகள் உள்ளார். வயதில் பத்து ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், இவர்களின் உறவு ரசிகர்களிடையே பேசுபொருளாக அமைந்தது.

இன்றும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரு துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் பிரியங்கா சோப்ரா, உலகளாவிய நடிகையாக திகழ்கிறார்.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய சிறிய வயது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement