தென்னிந்திய திரைப்பட உலகில் இருந்து பான் இந்தியன் ஸ்டாராக உயர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். "அனிமல்", "புஷ்பா 2", மற்றும் சமீபத்தில் வெளியான "சாவா" போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அண்மையில் ரிலீஸான அவரது "குபேரா" திரைப்படம், தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் சூப்பர் ஹிட்டாக விளங்கியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், ராஷ்மிகாவின் பெயரை மேலும் உயர்த்தியுள்ளது. தற்போது, இவர் "Girlfriend" மற்றும் "Thama" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. அழகில் கவர்ச்சியையும், அழுத்தமான முகபாவனைகளின் மூலம் ரசிகர்களை மீண்டும் மயக்க வைத்துள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Listen News!