• May 20 2024

சாதனை படைத்த நடிகர் மாதவனின் மகன்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் வீடியோ…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகர்கள் இயக்குநர்களாக மாறுவதும், இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதும் காலாகாலமாக இடம்பெற்று வருகின்ற ஒரு சம்பவம். அந்த வகையில் நடிகராக இருந்து தற்போது இயக்குநராக காலடி எடுத்து வைத்திருக்கும் ஒருவரே நடிகர் மாதவன்.

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் சாக்லட் பாயாக வலம் வந்த இவர் தற்போது 'ராக்கெட்ரி' படத்தை இயக்கி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தில் இயக்குநராக மட்டுமன்றி நம்பி நாராயணன் என்ற பாத்திரத்தில் கதாநாயகனாகவும் இவரே நடித்துள்ளார். இப்படத்தை பார்த்து விட்டு சாதாரண மக்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் உடைய மாபெரும் வெற்றியில் இருக்கும் மாதவனுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் மற்றுமோர் விடயம் நடந்துள்ளது. அதாவது நடிகர் மாதவனின் மகன் வேதந்த் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டு சாதனை நிழ்த்தி இருக்கின்றார்.

இதன் போது எடுத்த வீடியோவை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையில் இவரின் மகனிற்கு ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement