• May 09 2024

சிங்கம் படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்- அட இந்த நடிகர் தான் முதலில் கமிட்டானாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றிருக்கின்றது.அதிலும் விக்ரம் படத்தில் இவர் நடித்த ரோலக்ஸ கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சிங்கம். இப்படம் இதுவரை 3 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியிருந்தார் என்பதும் யாவரும் அறிந்ததே.

2010ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல நடிகை அனுஷ்கா ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர், மனோரமா, ராதாரவி, விஜயகுமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படம் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும் வசூ ரீதியாகவும் இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா கிடையாதாம்.இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது தளபதி விஜய் தானாம்.

அப்போது சில காரணங்களால் இப்படத்தில் விஜய்யால் நடிக்கமுடியாமல் போனதால், அதன்பின் இப்படத்தில் சூர்யா கமிட்டானதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement