• May 19 2024

இவரின் போன் நம்பர் கிடைத்தால் எனக்கு அனுப்பி வையுங்க- ரயிலில் பாடும் பெண்ணை தேடும் இசையமைப்பாளர் டி.இமான்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியவர் தான் டி.இமான். இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதுவரை 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்ற டி.இமான், டெரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டில் இதுவரை 7 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

விஸ்வாசம் படம் ரிலீசான சமயத்தில், திருமூர்த்தி என்ற பார்வை திறனற்ற இளைஞர், இமானுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த 'கண்ணான கண்ணே' பாடலை அழகாக பாடி இருந்தார். திருமூர்த்தியின் பாடலை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தனர்.

வரை பற்றி விசாரித்த இமான், திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.அத்தோடு தனது குழுவில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்தார்.இந்த நிலையில், தற்போது அடுத்ததாக மற்றொரு திறமைசாலியை தேடி வருகிறார் இமான்.

சமீபத்தில் ரயிலில் பாடல் பாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த இமான், அவரின் போன் நம்பர் உள்ளிட்ட விபரங்கள் இருந்தால் யாராவது பகிருங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார். திறமையாலிகளை அடையாளம் கண்டுபிடித்து, அவர்களின் திறமைகளை வெளியுலகிற்கு அடையாளம் காட்டும் இமானின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement