• Sep 01 2025

“ஒரே இரவில் இவ்வளவு ஹாட்” – விருதுகள் பெற்ற பின் மாளவிகா இன்ஸ்டா பதிவு வைரல்!

luxshi / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வருபவர் தான் மாளவிகா மோகனன்.


இவர் தற்போது தமிழில் சர்தார் 2, தெலுங்கில் தி ராஜா சாப், மலையாளத்தில் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


பிரபல சினிமா பத்திரிகையான பிலிம்பேர் வழங்கிய பிலிம்பேர் கிளாமர் அன்ட் ஸ்டைல் தென்னிந்தியா 2025 விருதுகளில், மாளவிகா மோகனன் “ஹாட்ஸ்டெப்பர் ஆப் த இயர்” மற்றும் “ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் த இயர்” என இரண்டு விருதுகளை வென்றுள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்த மாளவிகா,


“ஒரே இரவில் இரண்டு விருதுகள். ஒரே இரவில் இவ்வளவு ‘ஹாட்’ என்று அழைக்கப்படுவதை என்னால் கையாள முடியாத அளவிற்கு இருக்கிறது,” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாவில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதை மாளவிகா வழக்கமாக வைத்துள்ளார்.


பாலிவுட் நடிகைகள் கூட அந்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிடமாட்டார்கள். இதுவே அவருக்கு இந்த விருதுகளை பெற்றுத் தந்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தென்னிந்திய விருதுகள் என்ற பெயரில் நடந்தாலும், பெரும்பாலான விருதுகள் தெலுங்குத் திரையுலகத்தினருக்கே சென்றுள்ளன. தமிழ் திரைப்படத்திலிருந்து நடிகர் சித்தார்த் மட்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement