நடிகர் தனுஷின் இயக்கத்தில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியாக இருந்ததே " நிலவுக்குள் என் மேல் என்னடி கோபம்" திரைப்படம். அந்த திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸின் போது நடிகர் SJ.சூர்யா கதைத்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதன்போது SJ.சூர்யா , தன்னுடைய மனதில் தோன்றுவதைத் சொல்லுவதற்கு நான் கொஞ்சம் கூட கவலைப்படமாட்டேன் என்று கூறினார். மேலும், பாலச்சந்திரா சார் மற்றும் ஆனந்தராஜா ஆகியவர்கள் சேர்ந்து செய்கின்ற வேலையை தனுஷ் அசால்டா செய்து முடிப்பார் எனத் தெரிவித்திருந்தார்.
மேலும்அந்தப் படத்தில் பிரியங்கா மோகனுக்கு மாமியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சரண்யா மேடம் இங்கிலிஷ் பேசுகின்ற மாதிரி எல்லாம் சீன் இருக்கின்றது. அதைப் பார்க்கும் போது எல்லாம் நான் விழுந்து விழுந்து சிரிப்பேன் என்றதுடன் அந்தக் காட்சி எல்லாம் மிகவும் அழகாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் , இந்தப் படத்தை தான் பார்த்து விட்டதாக கூறிய அவர் படம் சூப்பராக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் டிரெய்லரைப் பார்த்து சந்தோசப்பட்ட மாதிரி படத்தையும் பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என சூர்யா கூறினார். அதுமட்டும் இல்லாது திரையுலகில் தற்பொழுது இளம் நடிகர்கள் குறைந்து காணப்படுகின்ற நிலையில் தனுஷ் சார் ஒரு பட்டாளத்தையே கொண்டுவந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Listen News!