• Sep 20 2024

டாப் 10இல் சிவகார்த்திகேயனின் படம்..நெட்பிளிக்ஸ் வெளியிட்ட உத்தியோகபூர்வமாக தகவல்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-இல் வெளியான திரைப்படம் டான்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள்மோகன் நடித்திருந்தார்.மேலும் எஸ். ஜே சூர்யா, சமுத்திரக்கனி, மற்றும் சூரி ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 100 கோடி ரூபாவை உலகம் முழுவதும் வசூலித்து மாஸ் ஹிட் கொடுத்து வருகின்றது.

இத் திரைப்படத்தின் 25 ஆவது வெற்றி விழா அண்மையில் நடைபெற்றிருந்ததோடு கடந்த ஜூன் 10 ஆம் திகதி பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்சில் ஸ்ட்ரீம் ஆனது.

இந்நிலையில் இந்தவார இந்திய படங்களின் டாப் 10 லிஸ்ட்டில் டான் முதலிடத்தில் உள்ளதாக நெட்பிளிக்ஸ் உத்தியோகபூர்வமாக தகவல் அறிவித்துள்ளது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement