• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் டான் உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி இல் கலக்கப்போவது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இன்று முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.

தல,தளபதி நடிகர்களுக்கு அடுத்த படியாக வெற்றி படங்களை நம்ம சிவகார்த்திகேயன் கொடுத்து வருகின்றார்.

அந்தவகையில் கடந்த வருடம் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்க இந்த வருடம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூலை பெற்று வருகின்றது.

தமிழகத்தின் பல இடங்களில் அஜித்தின் வலிமை மற்றும் விஜய்யின் பீஸ்ட் படங்களின் வசூலையும் தாண்டி வசூலித்து வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்துள்ளது.

படம் ரீலீஸாகி 12 நாட்களிலேயே உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. தற்போது உலகம் முழுவதுமே படம் ரூ. 113 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement