• Jul 27 2024

’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: சிவகார்த்திகேயனுக்கு பதில் இந்த நடிகரா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையில் உருவான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் அதில் சிவகார்த்திகேயன் கேரக்டரில் இளம் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் கூட ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் வெளியாகி நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படமான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் முடிவு செய்துள்ள நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பிஸியாக இருப்பதால் அவருக்கு பதிலாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கவினை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தவிர அந்த படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உட்பட மற்ற அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்கள் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கவின், வெற்றிமாறனின் ‘மாஸ்க்’ நெல்சனின் ‘பிளடி பெக்கர்’ மற்றும் ‘கிஸ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement