• May 30 2026

மனைவியின் வளைகாப்புக்கு ஒரு சேலை கூட வாங்கிக் கொடுக்கலையா? தாடி பாயின் இன்ஸ்டா போஸ்ட்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதை வென்றவர் பிரதீப் ஆண்டனி. அந்த சீசனில் இவரால் பெண்கள் மீது பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

நாள் நாளடைவில் அந்த சீசனில் கலந்துகொண்ட சக பெண் போட்டியாளர்களும் அது பொய் குற்றச்சாட்டு என வெளிவந்து பேட்டிகளை கொடுத்தனர். அந்த சீசனின் ஆரம்பத்திலேயே பிரதீப்தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது சதித்திட்டம் தீட்டப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டது பலருக்கும் வருத்தத்தை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு பிரதீப் ஆண்டனி திருமணம் செய்தார். அவரை ரசிகர்கள் செல்லமாக தாடி பாய் என்றே அழைத்து வருகின்றனர். இவர் அருவி, டாடா, கராத்தே பாபு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அவருடைய மனைவி பூஜா நிறைமாதக் கர்ப்பிணியாக உள்ள நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அவர்களுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் "புது புடவை வாங்க கேட்காமல், கல்யாண புடவையையே வளைகாப்புக்கு கட்டிக்கொண்டதற்கு கோடான கோடி நன்றி" என தனது மனைவிக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவர்களை வாழ்த்தியதுடன் மட்டுமல்லாமல், "மனைவிக்கு ஒரு புது புடவை கூட வாங்கிக் கொடுக்கலையா?" என காமெடியாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement